இனிய தமிழக ஆசிரிய பெருமக்களே மாணவ மணிகளே!

அனைவருக்கும் வணக்கம்! இந்த www.waytosuccess.org இணையதளம் உங்களுக்காகவே நிறுவப்பட்டுள்ளது. உங்களில் பலர் மிகச்சிறந்த திறமைசாலிகள்! பல்வேறு உத்திகளை பயன்படுத்தி கற்பித்து/கற்று வருகிறீர்கள்! உங்கள் திறமைகளை பகிர்ந்து கொள்ளும் ஒரு இடமாக இந்த இணையதளம் விளங்கும்.

ஆசிரியர்கள்/மாணவர்கள் தங்கள் படைப்புகளை / ஆலோசனைகளை / விமர்சனங்களை உடனே எங்களுக்கு அனுப்பி வைய்யுங்கள்.

  • மின்னஞ்சல் முகவரி way2s100@gmail.com / rkchinnappan@yahoo.com
  • திறமைகளை பொதுவில் வைப்போம்!
  • அனைவரும் அதனை பயன்படுத்தும் போது மகிழ்ச்சி கொள்வோம்!
  • எல்லோரும் சேர்ந்து வெற்றிபெறுவோம்!

தங்கள் அன்புள்ள கே. சின்னப்பன்

Register With Us - எங்களிடம் நீங்கள் பதிவு செய்து கொள்ளலாமே!

Teachers
ஆசிரியர்கள்
Students
மாணவர்கள் 
Parents பெற்றோர்கள் Student Teachers  ஆசிரிய மாணவர்கள்
2014-15ம் கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு ஆங்கிலப் பாட மாதிரிப் பொதுத் தேர்வு 29.12.2014 அன்றும் சிறப்புத்தேர்வு, நூற்றுக்கு நூறு பயிற்சி முகாம் மற்றும் வெற்றிவிழா 1.2.2015 அன்றும் மிகவும் சிறப்பாக நடந்தேறியது. வெற்றி விழாவில் நமது முன்னால் குடியரசுக் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் திரு. பொன்ராஜ் அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தினார். மாதிரிப் பொதுது் தேர்விலும் சிறப்புத்தேர்விலும் முதலிடம் இரண்டாமிடம் மூன்றாமிடம் பெற்ற மாணவர்களுக்கு ரூ10000, ரூ 7000, ரூ 5000 பரிசுகள் வழங்கப்பட்டது. சுமார் 4000 மாணவர்கள் பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்..

பத்தாம் வகுப்பிற்கான அனைத்து பாட உதவிக் குறிப்புகளும் 10th Study Materials பகுதியில் கிடைக்கிறது. அவற்றை தாங்கள் பார்வையிட்டு தேவைாயனவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம்.

பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் சில பாட உதவிக் குறிப்புகள் இங்கு கிடைக்கின்றன. மாணவர்கள் அவற்றை பயன் படுத்திக் கொள்ளலாம். பனிரெண்டாம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்கள் இதுபோன்ற பாட உதவிக் குறிப்புகளை எங்களுக்கு அனுப்பினால் அவற்றை மாணவர்கள் பயன்படுத்த வெளியிடுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

மாணவர்களுக்கான வழிகாட்டும் கட்டுரைகளும் அவ்வப்போது வெளியிடப்படுகின்றன.. அவற்றையும் படித்து வாழ்வில் கடைபிடித்தால் வெற்றி நிச்சயம். ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான படிப்புதவிக் குறிப்புகள் தொடர்ந்து வெளியிடப்படுகின்றன. அவற்றை ஆசிரிய மாணவர்கள் நன்கு பயன்படுத்தி திறமை மிக்க ஆசிரியர்களாக உருவெடுக்க எமது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

Flash News

  • மைக்ரோசாப்ட்-ன் புதுமை ஆசிரியர் போட்டியில் முதலிடம் பெற்று அமெரிக்காவில் நடைபெறும சர்வதேசக் கருத்தரங்கில் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்துகொள்ள இருக்கும் நமது ஆசிரியர் திரு.திலீப் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்
  • வெற்றி விழாக் காட்சிகளைக் காண நமது Way to Success Face Book பக்கங்களுக்குச் சென்று பார்வையிடுங்கள்

Our Products in Book form

2014-15 கல்வியாண்டில் வே டு சக்சஸ் படைப்பு்கள்

10-ம் வகுப்பு - அனைத்து பாடங்களுக்கும்

9-ம் வகுப்பு - ஆங்கிலம்

12-ம் வகுப்பு ஆங்கிலம்

TET- ஆங்கிலம்

................வழிகாட்டிப் புத்தகங்கள்

...Our Ventures will be continued